திருநாகேஸ்வரர் கோவில் பிரமோத்சவ விழா துவக்கம்
குன்றத்துார்,குன்றத்துாரில் பழமை வாய்ந்த திருநாகேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத 10 நாள் பிரமோத்சவ விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, காலை, மாலை சுவாமி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா, வரும் 8ம் தேதி காலை நடைபெற உள்ளது.