உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூர் டி - 20 கிரிக்கெட் 18 கல்லுாரிகள் பலப்பரீட்சை

திருவள்ளூர் டி - 20 கிரிக்கெட் 18 கல்லுாரிகள் பலப்பரீட்சை

சென்னை,திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து, கல்லுாரிகளுக்கு இடையிலான, 'டி - 20' கிரிக்கெட் போட்டியை, நேற்று முன்தினம் துவங்கின.போட்டிகள், ரெட்ஹில்ஸ் - திருவள்ளூர் சாலையில் உள்ள மேக்னா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கின்றன.இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட, 18 கல்லுாரி அணிகள் பங்கேற்று, 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் மோதுகின்றன. முதல் நாள் போட்டியை, மேக்னா கல்லுாரியின் சேர்மன் தேவதாஸ் நாயகம் துவக்கினார்.முதல் 'லீக்' ஆட்டத்தில், ஸ்ரீமுத்துகுமரன் கல்லுாரி, 17 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 77 ரன்களில் ஆட்டமிழந்தது.அடுத்து பேட்டிங் செய்த ஜெயா பொறியியல் கல்லுாரி, 14.2 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 80 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில், ஜெயா கலை கல்லுாரி, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 240 ரன்களை அடித்தது.அந்த அணியின் வீரர் அகமது, 63 பந்துகளில் ஐந்து சிக்சர், 18 பவுண்டரியுடன், 140 ரன்களை அடித்தார். அடுத்து களமிறங்கிய வேல்டெக் கல்லுாரி, 20 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 89 ரன்களில் சுருண்டது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ