மேலும் செய்திகள்
வரும் ஜூன் 2ல் மாவட்ட ஹாக்கி அணிக்கான தேர்வு
28-May-2025
சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பு சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்து வருகிறது. அந்த வகையில், ஆண்கள் பிரிவு போட்டி, கடந்த 2ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது. நேற்று நடந்த இறுதி போட்டியில், சென்னை 'அ' அணி, திருவள்ளூர் மாவட்ட அணியை எதிர்க்கொண்டது.விறுவிறுப்பான போட்டியில் சிறப்பாக விளையாடிய திருவள்ளூர் மாவட்ட அணி, 69-61 என்ற புள்ளிகள் அடிப்படையில், சென்னை அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.மூன்றாம் இடத்திற்கான போட்டியில், துாத்துக்குடி மாவட்ட அணி, கோவை அணியை, 62 - 60 என்ற புள்ளிகளில் வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய வீரர்களை அடுத்த மாதம் பஞ்சாபில் நடக்கும், 75வது ஜூனியர் மாநிலக் கூடைபந்து போட்டியில், தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்படுவர். பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று துவங்குகிறது.
28-May-2025