உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் மாணவியிடம் குறும்பு தி.நகரை சேர்ந்தவர் கைது

பஸ்சில் மாணவியிடம் குறும்பு தி.நகரை சேர்ந்தவர் கைது

சென்னை, சென்னை மாநிலக்கல்லுாரி மாணவியர் சிலர் நேற்று முன்தினம் மாலை, வழித்தடம் எண், 11 பஸ்சில் ஸ்பென்சர் பிளாசா நிறுத்ததில் ஏறினர். அதில் பயணித்த ஆண் நபர் வேண்டுமென்றே மாணவியர்களை இடித்து இடையூறு செய்துள்ளார்.ஒரு மாணவி அந்த நபரை தள்ளி நிற்கும்படி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நபர் மாணவியை ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் தகாத முறையில் நடந்துள்ளார்.பேருந்து ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்ததில் நின்றபோது அந்த நபர் இறங்கி ஓடும்போது, மாணவியர் சத்தம் போட்டனர். பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தி.நகரை சையது அப்துல் ரஹ்மான், 40 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ