மேலும் செய்திகள்
போதையில் தகராறு கை துண்டிப்பு
30-Oct-2024
திருவொற்றியூர், திருவொற்றியூர், கலைஞர் நகர் 11வது தெருவில் உள்ள காலி மனையில், கை மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக, சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், கலைஞர் நகர் 9வது தெருவைச் சேர்ந்த பைக் மெக்கானிக்கான அஜய், 25, என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பின், சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.தொடர் விசாரணையில், அஜய்யும், ஆட்டோ ஓட்டுனரான, ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த தினேஷ், 28, என்பவரும் நண்பர்களாவர். ஓராண்டிற்கு முன், இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதனிடையே, தீபாவளியன்று, அஜய் தன் நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.இந்த தகவல், தினேஷுக்கு தெரியவரவே, நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் கலீல் என்பவரது வீட்டிற்கு, அஜய்யை அழைத்து மது அருந்திக் கொண்டே இது குறித்து விசாரித்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அஜய் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, தினேஷை குத்த முயற்சித்துள்ளார். அஜய்யிடம் இருந்து கத்தியை பிடுங்கிய தினேஷ், திருப்பி அவரை குத்தியதில் அஜய் சம்பவ இட த்திலேயே உயிரிழந்தார். பின், உடலை அருகேயுள்ள காலி மனையில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது. தினேைஷ நேற்று மதியம் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கலீலை தேடி வருகின்றனர்.
30-Oct-2024