உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை, செங்கையில் அச்சுறுத்தும் காய்ச்சல்... 11 வகை வைரஸ்!  கட்டுப்படுத்த சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை

 சென்னை, செங்கையில் அச்சுறுத்தும் காய்ச்சல்... 11 வகை வைரஸ்!  கட்டுப்படுத்த சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை

சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டெங்கு' மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் வாயிலாக, மழைக்கால காய்ச்சல் சிறப்பு முகாம், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல், சளி, இருமல், உடல்வலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு, எவ்வித தடுப்பு மருந்தும் பயனளிக்காமல், தொடர்ந்து உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்ப்ளூயன்ஸா ஏ எச்1என்1, இன்ப்ளூயன்ஸா ஏ எச்3என்2, இன்ப்ளூயன்ஸா பி, நுரையீரல் தொற்று ஏ அண்டு பி, கொரோனா வைரஸ், பாரேன்ப்ளூயன்ஸா 1 அண்டு 3, அடினோ வைரஸ், ஹியூமன் மெட்டப்நியூமோ வைரஸ் ஆகிய 11 வகையான வைரஸ் பரவி வருகிறது. இந்த வகை வைரஸ்கள், பெரும்பாலும் உயிர்க்கொல்லி இல்லையென்றாலும், சிலருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், ஒரு வகை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைவோர், மற்றொரு வைரஸால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர்.சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம் பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, டாக்டர்கள்கூறியதாவது:சென்னையில் பரவும் வைரஸ் காய்ச்சல்கள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையில் இல்லை. குறிப்பாக, டெங்குவை விட இன்ப்ளூயன்ஸா வகை பாதிப்பு தான் அதிகமாக உள்ளது. புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்தாலே, இந்த பாதிப்பு குணமாகி விடும். அதேநேரம், இதை அலட்சியப்படுத்தினால், சில நேரங்களில் பாதிப்பு தீவிரத்தன்மையுடன் இருக்கலாம். டெங்கு, இன்ப்ளூயன்ஸா பாதிப்பு வகை எது என்பது, டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் தான் தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விரைவில் நிரப்பப்படும்சென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மை தான். அப்பணியிடங்களை நிரப்ப, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 500 டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட பணியிடங்கள் ஓரிரு வாரங்களுக்குள் நிரப்பப்படும். பொதுமக்களை பாதிக்காதவாறு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.- குமரகுருபரன், சென்னை மாநகராட்சி கமிஷனர்டெங்கு கட்டுக்குள் உள்ளதுதமிழகத்தில் டெங்கு இல்லை என, பலமுறை சொல்லி விட்டோம். டெங்கு பாதிப்பில், 2012ல் அதிகளவிலான மரணம் 66 ஆக இருந்தது. இந்தாண்டு இதுவரை, வெறும் எட்டு இறப்புகள் மட்டுமே நடந்துள்ளன. அதுவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சரியான நேரத்தில் டாக்டரை அணுகாதது போன்ற காரணங்களால் ஏற்பட்டவை. டெங்கு, இந்த ஆண்டு கட்டுக்குள் உள்ளது. - சுப்பிரமணியன்,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ