ஐ.டி., ஊழியரை தாக்கிய மூவர் கைது
செம்மஞ்சேரி,சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் நிஷாந்த், 24; ஐ.டி., ஊழியர். இரு தினங்களுக்கு முன், இரவு பணி முடித்து வீட்டிற்கு புறப்படும்போது, டீ குடிக்க சோழிங்கநல்லுார் கடைக்கு சென்றார்.டீ எடுத்து திரும்பும்போது, ஒரு நபரின் தோளில் அவரது கை பட்டுள்ளது. அதற்கு நிஷாந்த், உடனே மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால், போதையில் இருந்த நபர், நிஷாந்தை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.மேலும், நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து, நிஷாந்தின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.பலத்த காயமடைந்த நிஷாந்தின் முகத்தில், எட்டு தையல் போடப்பட்டது. செம்மஞ்சேரி போலீசாரின் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிவரஞ்சன், 25, அஸ்வின், 21, டேவிட், 26, என, தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.