உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தட்டிக்கேட்டவரை தாக்கிய மூவர் கைது

சாலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தட்டிக்கேட்டவரை தாக்கிய மூவர் கைது

கொடுங்கையூர், கொடுங்கையூர், எழில் நகர், 16வது தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 50; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று தன் வீட்டருகே நடந்து சென்ற போது, ரவிக்குமார் என்பவரின் பிறந்த நாளை, நடு சாலையில் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தனர்.அவ்வழியே வந்த விஜயகுமார், அவர்களிடம் வழி விடுமாறு கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், விஜயகுமாரை தாக்கினர்.இதில் காயமடைந்த விஜயகுமார், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் மணிகண்டன், 30, கொடுங்கையூரை சேர்ந்த உதயகுமார், 23, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை