உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: மூவர் கைது

வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: மூவர் கைது

சென்னை போலி ஆவணங்கள் மூலமாக, 60 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.ஐ.ஓ.பி., வங்கியின் ஈக்காட்டுதாங்கல் கிளை மேலாளர் சுகன்யா, 35, சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்: 'சேனக்ஸ் பில்டர்ஸ்' நிறுவனத்தார் காட்டாங்கொளத்துாரில் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டு வீடுகளை, வாடிக்கையாளர்களுக்கு விற்றுள்ளனர்.அவற்றை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வங்கியில், 60 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டு இருந்தது.வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரரான வண்டலுாரைச் சேர்ந்த தேர்விஜயன், 63, மோசடி செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை தேடி வந்தனர்.வழக்கில் தொடர்புடைய முகலிவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி, 31, சுரேஷ், 41, கீழ்கட்டளை சேர்ந்த கார்த்தி, 38 ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை