மேலும் செய்திகள்
கத்தியுடன் காரில் வலம் மாணவர்கள் 4 பேர் கைது
05-Mar-2025
சென்னை:எழும்பூர் ஆய்வாளர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் புதுப்பேட்டை, சி.பி.எம்., தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அங்கு, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற மூவரை பிடித்து சோதனை செய்ததில், 17 கிராம் ஹெராயின், 1.150 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.தொடர்ந்து மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தாதுல் இஸ்லாம், 26, ரகிபூர் ரகுமான்கான், 36, அஸ்கர் அலி, 21, என்பது தெரியவந்தது.நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், போதைப் பொருட்கள், இரண்டு மொபைல்போன், 1,950 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
05-Mar-2025