உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீட்டர் வட்டி கட்ட தவறிய டிரைவரின் குடும்பம் தனி அறையில் அடைத்து சித்ரவதை தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட மூவர் கைது

மீட்டர் வட்டி கட்ட தவறிய டிரைவரின் குடும்பம் தனி அறையில் அடைத்து சித்ரவதை தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட மூவர் கைது

திருத்தணி, 'மீட்டர் வட்டி'க்கு பணம் வாங்கிய ஓட்டுனர் மற்றும் குடும்பத்தினரை, தனி அறையில் வைத்து தாக்கிய மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 30; கார் டிரைவர். இவர், அரக்கோணம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்திவரும் பாஸ்கர், 55, என்பவரிடம், மூன்று மாதங்களுக்கு முன், 50,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகைக்கு தினமும், 600 ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக, 10 நாட்களாக வட்டி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை, பிரித்திவிராஜ் வீட்டிற்கு வந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் தமிழ்வாணன், 35, தீபக் என்ற அப்பு, 34, ஆகியோர், வட்டி பணத்தை கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என, பிரித்திவிராஜ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பிரித்திவிராஜ், அவரது மனைவி சுவாதி மற்றும் 11 மாத கைக்குழந்தையை, காரில் அரக்கோணத்திற்கு கடத்திச் சென்றனர். அங்குள்ள தனியார் விடுதியில் அடைத்து, தம்பதியை சரமாரியாக தாக்கி, மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அன்று இரவு 8:00 மணிக்கு பிரிதிவிராஜை மட்டும் விடுவித்து, பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மனைவி, குழந்தையை மீட்டுச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து பிரித்திவிராஜ், திருத்தணி ஏ.எஸ்.பி., ஷுபம் திவானிடம் தன் மனைவி, குழந்தையை மீட்டு தருமாறு புகார் அளித்தார். இதன்படி, திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் அரக்கோணம் சென்று, தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுவாதி மற்றும் கைக்குழந்தையை மீட்டனர். மேலும், நிதி நிறுவன ஊழியர்களான தமிழ்வாணன், அப்பு, உரிமையாளர் பாஸ்கர் ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர். --------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ