உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அன்னிய செலாவணி மோசடி: 32 ஆண்டாக சிக்காத மூவர்

அன்னிய செலாவணி மோசடி: 32 ஆண்டாக சிக்காத மூவர்

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில், 32 ஆண்டுகளாக சிக்காத மூவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் வன்னியர் தெருவைச் சேர்ந்த ஜீவா என்ற ராஜலிங்கம், ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்ற குல்ல ஜெயா, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அருணாசலம் ஆகியோர் கூட்டு சதி செய்து, போலி விமான டிக்கெட்டுகளை அச்சடித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, 1994ல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எழும்பூர் சி.பி.சி.ஐ.டி., நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. 2011ல் மூவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேடியும் கிடைக்காததால், மூவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி