உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கர்ப்பிணியை தாக்கிய சிறுவன் உட்பட மூவர் கைது

கர்ப்பிணியை தாக்கிய சிறுவன் உட்பட மூவர் கைது

காசிமேடு, கர்ப்பிணி உள்ளிட்ட இருவரை தாக்கிய, சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, தண்டையார்பேட்டை, ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மதுமிதா, 27, ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 18 ம் தேதி இரவு, வீட்டின் முன் அத்தை மகன் நரேஷ் உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, டூ - வீலரில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அருகே வந்து, சடன் பிரேக் போட்டுள்ளார். இதை கண்டித்த நரேஷ், அவரை கையால் தாக்கியுள்ளார். அங்கிருந்த சென்ற வாலிபர், தன் நண்பர்கள் மூவருடன் அழைத்து வந்து, நரேஷிடம் தகராறு செய்து, அடித்துள்ளனர். தடுக்க வந்த கர்ப்பிணியான மதுமிதாவையும் தாக்கி விட்டு தப்பியுள்ளனர். இதில், மதுமிதாவிற்கு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.காசிமேடு போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர். தாக்குதலில் தொடர்புடைய, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மகேஷ்வரன், 19, சரவணன், 19 மற்றும் 17 வயதுடைய சிறுவன் உட்பட மூவரை போலீசார், நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். தலைமறைவான முக்கிய குற்றவாளி மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ