உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமையல் கலைஞரை தாக்கிய உறவினர்கள் மூவர் கைது

சமையல் கலைஞரை தாக்கிய உறவினர்கள் மூவர் கைது

சென்னை, : தேனாம்பேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 32. இவர், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில், சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் 12:45 மணிக்கு, வேலைக்கு செல்வதற்காக, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, அவரது மனைவி உஷாவின் தம்பி கோபிநாதன், மாமா நடராஜன், உறவினர் நல்லுசாமி ஆகிய மூவரும் வழிமறித்து, கை மற்றும் கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, அவர் கொடுத்த புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இதில், சந்தோஷ்குமாரின் உறவினர்களான நடராஜன், 51, நல்லுசாமி, 54, கோபிநாதன், 22, ஆகிய மூவரும் தாக்கியது தெரியவந்தது. நேற்று, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை