உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (27.07.2025)

இன்று இனிதாக (27.07.2025)

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஆண்டாள் திருப்பாவை சேவை-, காலை 8:45 மணி. திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா, -மாலை 4:30 மணி. ஆண்டாள் தேர் புறப்பாடு,- மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  தண்டீஸ்வரர் கோவில் ஆடலரசன் தலைமையிலான திருவாசகம் முற்றோதல், காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.  அர்க்கீஸ்வரர் கோவில் விஜயா சுவாமிநாதன் தலைமையிலான உழவாரப்பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.  கங்காதீஸ்வரர் கோவில் அறக்கொடியோன் கயிலாய வாத்தியத்துடன் வேணுகோபால் தலைமையிலான, 276வது உழவாரப்பணி, காலை 9:00 மணி முதல். இடம்: கூடப்பாக்கம், பூந்தமல்லி.  கணேஷ் மண்டலி நாமசங்கீர்த்தன மகோத்சவம், ஷியாம் சுந்தர் பாகவதரின் உபன்யாசம், காலை 7:45 மணி. ஆஞாசநேயர் உற்சவம்: இரவு 8:00 மணி. இடம்: 17வது தெரு, நங்கநல்லுார். பொது  மருத்துவ கண்காட்சி மருத்துவம் சார்ந்த துறைகள் அடங்கிய சிறப்பு மருத்துவ கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.  'போலாமா' கண்காட்சி சிறந்த கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள், கலை பொருட்கள், உணவு பொருட்களின் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பிரிமரோஸ், மயிலாப்பூர்.  பெசி ரீட்ஸ் கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.  கல்லுாரி விழா அலுமினி கூட்டம் துவக்க விழா,- காலை 10:00 மணி. நிறைவு விழாவில் பங்கேற்பு: நடிகர் தலைவாசல் விஜய், பிற்பகல் 3:00 மணி. இடம்: எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி, கவுரிவாக்கம்.  பக்தி இன்னிசை தலைமை: டி.புருசோத்தமன். பக்தி இன்னிசை: பி.லட்சுமிசிரி குழுவினர், மாலை 5:30 மணி. இடம்: எம்.எம்., மகால், கப்பல்போலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.  திருப்புகழ் சொற்பொழிவு பாரதி பாசறையின், 155ம் மாதத் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு - 'வேல் மாறல்' என்ற தலைப்பில், முனைவர் மா.கி.ரமணன் பேச்சு, காலை: 10:00 மணி, திருப்புகழ் சபை, 39/25 கிராமத் தெரு, திருவொற்றியூர்.  34ம் ஆண்டு ரத்ததான முகாம் சோடியக் பிரண்ட்ஸ் டிரஸ்ட் நடத்தும் ரத்ததான முகாம், காலை 9:00 மணி முதல். இடம்: மரகதம் மாளிகை, ரெய்னி மருத்துவமனை எதிரில், ஜி.ஏ., சாலை, பழைய வண்ணாரப்பேட்டை.  இசை சித்திரம் சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை மற்றும் விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில், திருவண்ணாமலை கம்ப ராமாயண இயக்கம் வழங்கும் இதிகாச பாத்திரங்கள் நிகழ்ச்சி - மாலை 5:30 மணி. இடம்: விவேகானந்தர் இல்லம், மெரினா. தொடர்புக்கு: 98410 10821.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ