உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் சூரிய பிரபை புறப்பாடு - காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம் - காலை 9:00 மணி. சந்திர பிரபை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  கபாலீஸ்வரர் கோவில் ரத சப்தமியை முன்னிட்டு, சந்திரசேகர சுவாமிகள் திருவீதி உலா - காலை 7:30 மணி. ஜகதீஸ்வரர் அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.  ஆதிபுரீஸ்வரர் கோவில் ஆதி திரிபுரா இன்னிசை வகுப்பின், 2வது ஆண்டு விழா. மாணவர்களின் திருமுறை பாராயணம், திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சிந்தாதிரிப்பேட்டை.  அர்கீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: சக்தி சூரி அம்மன் கோவில் வளாகம், பம்மல்.  மாதவ பெருமாள் கோவில் ரத சப்தமி, சூரிய பிரபை - காலை 7:00 மணி. சந்திர பிரபை - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.  சீதா கல்யாண சொற்பொழிவு முரளிதரதாசின் திவ்யநாமம் மற்றும் சீதா கல்யாண சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: குருவாயூரப்பன் கோவில், நங்கநல்லுார்.  கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.  ஜெயின் கல்லுாரி சுதேசி சங்கல்ப யாத்ரா. பங்கேற்பு: கவர்னர் ஆர்.என்.ரவி, முனைவர் காமகோடி, தீபக் சர்மா- - மாலை 5:00 மணி. இடம்: ராஜிவ்காந்தி சாலை, துரைப்பாக்கம்.  வாக்கத்தான் மடிப்பாக்கம் ஏரி முதல் புழுதிவாக்கம் ஏரி வரை - காலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில் அருகில், மடிப்பாக்கம்.  சொற்பொழிவு திருவொற்றியூர் பாரதி பாசறையின், திருவாசகம் தொடர் சொற்பொழிவு துவக்கவிழா - 'திருமந்திர திலகம்' மா.கி.ரமணன் சிறப்புரை - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீபாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, கிராம தெரு, திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை