உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்னோரை நினைவுகூரும் ஆடி அமாவாசை இன்று

முன்னோரை நினைவுகூரும் ஆடி அமாவாசை இன்று

ஆடி அமாவாசை தினத்தில், நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது சிறப்பாகும். பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் துவங்கினால், நிச்சயம் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். இந்தாண்டின் ஆடி அமாவாசையான இன்று, சென்னையில் பல இடங்கள், கோவில்கள், நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை