மேலும் செய்திகள்
விதிமீறும் கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு
22-Jul-2025
சென்னை, சென்னை தலைமைச் செயலகம் உள்ள காமராஜர் சாலை, புதிய ஜார்ஜ் கோட்டையில், வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை, 6:00 மணி முதல் 10:00 மணி வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. உழைப்பாளர் சிலை - ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலம் வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலையில் திரும்பி அண்ணாசாலை - மன்றோ சிலை - முத்துசாமி பாலம் வழியாக செல்லலாம் ராஜாஜி சாலையில் இருந்து தலைமை செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், என்.எப்.எஸ்.,சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் - முத்துசாமி பாலம் - அண்ணாசாலை - வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலை செல்லலாம் சுதந்திர தின விழாவுக்கான 'பாஸ்' வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள்: சிவப்பு மற்றும் ஊதா நிற பாஸ் வழங்கப்பட்ட வாகனங்கள், காலை 8:30 மணிக்கு முன் ராஜாஜி சாலை சென்று, தலைமைச் செயலக நுழைவாயில் அருகே விருந்தினர் இறங்கிய பின், வாகனங்களை உள்ளே நிறுத்த வேண்டும் காலை, 8:30 மணிக்கு பிறகு வரும் அழைப்பாளர்களின் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலஜா சாலை - அண்ணாசாலை - முத்துசாமி பாயிண்ட் - ராஜா அண்ணாமலை மன்றம் - என்.எப்.எஸ்.,சாலை - ரிசர்வ் வங்கி சுரங்கப்பாலம் வழியாக, தலைமை செயலகத்தின் வெளிப்புற வாயிலை அடைய வேண்டும் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பாஸ்கள் வழங்கப்பட்ட அனைத்து வாகனங்களும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்து மாற்றங்களுக்கு, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
22-Jul-2025