உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இசை நிகழ்ச்சி நந்தனத்தில் போக்குவரத்து மாற்றம்

இசை நிகழ்ச்சி நந்தனத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை,நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. அதனால், போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேனாம்பேட்டை வழியாக பார்வையாளர்களை ஏற்றி வரும் ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், செனடாப் சாலை - காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2வது தெரு வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபக்கம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யூ டர்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில், வி.வி.ஐ.பி., பாஸ் மற்றும் திரை கலைஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ