மேலும் செய்திகள்
பஸ் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
30-Sep-2024
சென்னை:அண்ணா சாலையில், தடையை மீறி 'நோ - பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையில், போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்யும் விதமாக, வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.தொடர்ந்து, ஸ்பென்சர் சிக்னல் - டேம்ஸ் சாலை வரையிலான அண்ணா சாலையில் வாகனங்களை நிறுத்த, போக்குவரத்து போலீசார் தடை விதித்தனர்.மேலும், 10 இடங்களில், இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, எச்சரிக்கை பதாகைகளை அமைத்தனர்.இந்நிலையில், தடையை மீறி ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், எல்.ஐ.சி., பேருந்து நிறுத்தத்திற்கு முன் அணிவகுத்து வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.இதனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பயணியருக்கும் இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, தடையை மீறி நோ - பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-Sep-2024