உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி நேரம் குறைக்க கோரி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நேரம் குறைக்க கோரி ரயில் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அகில இந்திய லோகோ ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், சென்னை சென்ட்ரல் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய லோகோ ரயில் ஓட்டுனர்கள் சங்கத்தின் மத்திய அமைப்பு செயலர் பாலச்சந்திரன், தென்மண்டல இணை செயலர் பார்த்தசாரதி ஆகியோர் கூறியதாவது:ரயில்வேயில் விபத்துகளுக்கு ரயில் ஓட்டுனர்களின் கவனக்குறைவு காரணமாக கூறப்படுகிறது. தொடர் இரவு பணிகள், போதிய ஓய்வு இல்லாதது போன்ற காரணங்களால், கவனக்குறைவு ஏற்படுவதாக விசாரணை அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. பணிச்சுமையால் ரயில் ஓட்டுனர்களின் மன நலம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே, ரயில் ஓட்டுனர்களுக்கு வாரந்திர ஓய்வை உறுதிப்படுத்த வேண்டும். பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும். தொடர்ந்து நான்கு இரவு பணிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றக்கோரி, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை