உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை ரகளை

கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை ரகளை

சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வந்த திருநங்கை, வீடு கேட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, திருநங்கை ஒருவர் நேற்று காலை மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். தீக்குளிக்கப்போதாக கூறியபடி வந்த அவரை தடுத்து நிறுத்திய, பாதுகாப்பு பெண் போலீசார், அவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கினர். உடனே, கீழே அமர்ந்து கொண்டு தரையில் தலையை இடித்துக் கொண்டு, 'திருவல்லிக்கேணி போலீசார் என்னை அடிக்கின்றனர். நான் தங்க வசதியாக வீடு வேண்டும்' எனக்கூறி ரகளை செய்தார்.பாதுகாப்பு போலீசார் விசாரித்ததில், பல்லவன் சாலையைச் சேர்ந்த புவனேஷ்வரி, 33 என்பதும், மது போதையில் ரகளை செய்வதும் தெரியவந்தது. அவ்வப்போது, திருவல்லிக்கேணி காவல் நிலையம் சென்று, வீடு வேண்டும் எனக்கேடு போதையில் தகராறு செய்தது தெரியவந்தது. பின், திருநங்கையை போலீசார் எச்சரித்து, அங்கிருந்து வெளியேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி