உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிரையத்லான் நீச்சல் போட்டி சென்னையில் 15ல் துவக்கம்

டிரையத்லான் நீச்சல் போட்டி சென்னையில் 15ல் துவக்கம்

சென்னை,நீச்சல், சைக்கிளிங் மற்றும் ஓட்டம் ஆகியவற்றை இணைத்து நடத்தப்படும் டிரையத்லான் நீச்சல் போட்டி, சென்னையில் வரும் 15ல் துவங்குகிறது.'ட்ரை டு சாம்ப்' அமைப்பு மற்றும் தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில், 'அக்வாபெஸ்ட் 25 - சென்னை' எனும் டிரையத்லான் கடல்சார் போட்டியின் நான்காவது பதிப்பு, சென்னை மற்றும் கோவளத்தில் வரும் 15ம் தேதி நடக்கிறது.இதில் நாடு முழுதும் இருந்து சிறந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகள், காலை 6:00 மணிக்கு துவங்கி, அன்று முழுதும் நடக்கும்.டிரையத்லான், அக்வாத்தலான், மாரத்தான் உட்பட பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடக்க உள்ளன. டிரையத்லான் நீண்ட துாரப் போட்டி, தனிநபர் பிரிவில், ஒரு நபர் 1.9 கி.மீ., நீச்சல்; 90 கி.மீ., சைக்கிளிங்; 21 கி.மீ., ஓட்டம் என, மொத்தம் 113 கி.மீ., பந்தயத்தை 8:00 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.இதே போல் 51.5 கி.மீ., மற்றும் 30.5., கி.மீ., என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளன. தவிர, ஒலிம்பிக் டிஸ்டன்ஸ் நீச்சல் மற்றும் சைக்கிளிங் போட்டிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை