மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய இருவர் கைது
02-Apr-2025
தரமணி:திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ரசீல்மியா, 28. தரமணி பகுதியில் ஏழு ஆண்டுகளாக தங்கி, கட்டுமானம் மற்றும் ஹோட்டலில் பணி செய்து வந்தார்.திரிபுரா மாநிலம் அடிக்கடி சென்று, கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் சில்லறை வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்தார்.நேற்று, திரிபுராவிலிருந்து ரயில் vஆயிகாக கஞ்சா கடத்தி வந்து, தரமணிக்கு வியாபாரிகளை வரவழைத்து, கஞ்சாவை கொடுக்க தயாராக இருந்தார்.ரகசிய தகவலின்படி, தரமணி போலீசார், ரசீல்மியாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
02-Apr-2025