உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் திருப்பி விடப்பட்ட கழிவு நீரால் அவதி

சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் திருப்பி விடப்பட்ட கழிவு நீரால் அவதி

சிட்லப்பாக்கம், மார்ச் 27-தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், சிட்லப்பாக்கம், துரைசாமி நகரில், சிட்லப்பாக்கம் பிரதான சாலை - கக்கன் தெரு சந்திப்பில், பழைய மழைநீர் கால்வாயை இடித்து, புதிய கால்வாய் கட்டப்படுகிறது.சிட்லப்பாக்கம் பிரதான சாலை வழியாக செல்லும் கழிவு நீர், கக்கன் தெரு கால்வாய் வழியாக சென்று, அருகேயுள்ள ஏரியில் கலக்கிறது.அப்படியிருக்கையில், கால்வாய் கட்டுவதால், அதன் வழியாக செல்ல வேண்டிய கழிவு நீர், சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது.இதனால், நாள்தோறும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அதிக போக்குவரத்து கொண்ட இந்த சாலையில், பத்து நாட்களுக்கு மேலாக ஆறாக ஓடும் கழிவு நீரால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.ஒரு இடத்தில் கால்வாய் கட்டும் போது, கழிவுநீர் செல்ல மாற்று பாதையை ஏற்படுத்தி, பணி செய்ய வேண்டும்.ஆனால், மூன்றாவது மண்டல பொறியியல் பிரிவினர், மக்களை பற்றி கவலைப்படாமல், சாலையிலேயே திருப்பி விட்டது அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை