உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காலி இடத்தில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

காலி இடத்தில் கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியில் திறந்தவெளியில் கழிவுநீர் கொட்டிய லாரியை, போலீசார் பறிமுதல் செய்தனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜவகர் நகரில் உள்ள காலி இடங்களில் அடிக்கடி லாரி கழிவுநீர் கொட்டப்பட்டது. குடிநீர் வாரிய அதிகாரிகள், அதுபோன்ற லாரிகளை பறிமுதல் செய்தனர். கழிவுநீர் கொட்டுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் செம்மஞ்சேரி போலீசார், நேற்று, ஜவகர் நகரில் கழிவுநீர் கொட்டிய டி.என்:04 எ.எச் 0213 பதிவெண் கொண்ட லாரியை மடக்கி பிடித்தனர். பின், ஓட்டுநர் ஆல்பர்ட், 36, லாரி உரிமையாளர் குணசேகரன், 48, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை