புளியந்தோப்பு சிறுமி கர்ப்பம் காதலனிடம் விசாரணை
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த, 39 வயது பெண்ணின் 17 வயது மகள், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த மாதம் 28ம் தேதி, காதலனுடன் சிறுமி வெளியே சென்றுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், மகளை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து சிறுமி, காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தாய்க்கு போன் செய்த மகள், தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். சிறுமியை, எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றார்.மருத்துவர் நடத்திய பரிசோதனையில், சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய, அவரது காதலன் கார்த்திக், 20, என்பவர் மீது, சிறுமியின் தாய், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்படி, போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.