உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டி.வி.எஸ்., எமரால்டு நிறுவனம் ரூ.2,800 கோடிக்கு புதிய திட்டம்

டி.வி.எஸ்., எமரால்டு நிறுவனம் ரூ.2,800 கோடிக்கு புதிய திட்டம்

சென்னை, 'டி.வி.எஸ்., எமரால்டு' நிறுவனம், 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் திட்டத்திற்காக, சென்னையில் 12 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது. 'டி.வி.எஸ்., ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.வி.எஸ்., எமரால்டு நிறுவனம், சென்னை மற்றும் பெங்களூருவில் குடியிருப்புத் திட்டங்கள் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை ரேடியல் சாலையில், 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் திட்டத்துக்காக, 12 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இதில், 25 லட்சம் சதுர அடி பரப்பளவில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் நிலத்தை கையகப்படுத்தியதற்கான விலை குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே, சென்னை படூரில் 4 ஏக்கர் நிலத்தையும், பெங்களூரு தனிசந்திராவில் 4 ஏக்கர் நிலத்தையும் வாங்கியுள்ளது.இந்நிறுவனம் சென்னையில் 36 லட்சம் சதுர அடி பரப்பிலான குடியிப்பு திட்டங்களை வழங்கியுள்ளதுடன், 86 லட்சம் சதுர அடி பரப்பிலான திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை