ரூ.5.90 லட்சம் மோசடி செய்த இருவருக்கு வலை
கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சையது ஆலிம், 34; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்க தெரிந்த நபர்களான தபரேஷ் ஆலம் மற்றும் கலித் ஆகியோர், தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, 5.90 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.ஆனால், குறிப்பிட்ட நாளில் திருப்பி செலுத்தவில்லை. இது குறித்து, சையது, 10வது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.