உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ.டி.எம்., மையத்தில் நுாதன மோசடி இருவர் கைது; 55 கார்டுகள் பறிமுதல்

ஏ.டி.எம்., மையத்தில் நுாதன மோசடி இருவர் கைது; 55 கார்டுகள் பறிமுதல்

புதுவண்ணாரப்பேட்டை:தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 53; பிளாஸ்டிக் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எம்.டி.எம்., மையத்திற்கு சென்றார்.அங்கிருந்த இருவர், பணம் எடுத்து கொடுக்க உதவுவதாக கிருஷ்ணனிடம் ஏ.டி.எம்., கார்டை வாங்கியுள்ளனர். ஏ.டி.எம்., மிஷினில் கார்டை செலுத்தி பணம் எடுப்பது போன்று நடித்து, பின்னர் பணமில்லை எனக்கூறி ஏ.டி.எம்., கார்டை கிருஷ்ணனிடம் கொடுத்து சென்றனர்.சிறிது நேரத்தில், கிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு முறை 10,000 வீதம், 20,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என, மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது, வேறு ஏ.டி.எம்., கார்டு கொடுத்து, அந்த நபர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாரின் விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த புஹாரிகுமார், 30, 37, ஆகியோர் என்பதும், இதே பாணியில் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 55 ஏ.டி.எம்., கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை