உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது

வாலிபரை கடத்தி தாக்கிய இருவர் கைது

மதுரவாயல்,ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்தவர், பாக்கியராஜ், 27. இவர் சென்னையில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர், மதுரவாயல் ஆலப்பாக்கம் ஸ்ரீலெட்சுமி நகரை சேர்ந்த ரஞ்சித், 24 என்பவரிடம் ஓராண்டுக்கு முன் 50,000 ரூபாய் கடன் பெற்றார். இதில், 5,000 ரூபாய் மட்டுமே திருப்பி அளித்த நிலையில், விரைவில் மீத பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 6 ம் தேதி காலை பைக்கில் வந்த ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் பிச்சைமணி, 24 ஆகியோர் பாக்கியராஜிடம் பணம் கேட்டதுடன், அவரை பைக்கில் கடத்தி சென்றனர். ரஞ்சித் வீட்டில் அடைத்து வைத்து, கையால் தாக்கினர். பாக்கியராஜ் தனக்கு தெரிந்த நபரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி, அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரஞ்சித், பிச்சைமணி, 24 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி