மேலும் செய்திகள்
மது போதையில் தகராறு சிறுவன் அடித்து கொலை?
05-Aug-2025
செங்குன்றம், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கொன்று மரத்தில் தொங்கவிட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம், விளாங்காடுபாக்கம் மல்லிமா நகர் கால்பந்து மைதானம் அருகே உள்ள மரத்தில், கடந்த 4ம் தேதி காலை, வாலிபர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்கினார். செங்குன்றம் போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரித்ததில், இறந்தவர், பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், 19 என்பது தெரிய வந்தது. ராஜேஷ் தன் நண்பர்களான மல்லிமா நகரை சேர்ந்த சந்தோஷ்குமார், 22, புழலை சேர்ந்த இளம்பரிதி, 20 ஆகியோர் சேர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. அதில், பீர் பாட்டிலால் தலையில் அடித்து, ராஜே ைஷ இருவரும் கொன்றது தெரியவந்தது. யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் காட்ட, மரத்தில் தொங்கவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்தோஷ்குமார், இளம்பரிதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர். ***
05-Aug-2025