எபெட்ரின் போதை பொருள் வைத்திருந்த இருவர் கைது
சென்னை, திருவல்லிக்கேணியில், எபெட்ரின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருவல்லிக்கேணி, லால்பேகம் தெருவில் திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முரண்பாடாக பதிலளிக்க, உடைமைகளை சோதனை செய்தனர்.இதில், 2.50 லட்சம் மதிப்பிலான, 2 கிலோ 'எபெட்ரின்' என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பீர்முகமது, 46, சையது ஜலாலுதீன், 49, என்பது தெரியவந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.