உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஸ்ஸாம் வாலிபரிடம் வழிப்பறி: இருவர் கைது

அஸ்ஸாம் வாலிபரிடம் வழிப்பறி: இருவர் கைது

கே.கே.நகர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிட் லிம்பு, 22. இவர், கே.கே.நகரில் தங்கி, அசோக் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார்.கடந்த 4ம் தேதி பணி முடிந்து, கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், அமிட் லிம்புவிடம் கத்தி காட்டி மிரட்டி, 5,000 ரூபாய் பறித்து தப்பினர்.இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், அசோக் நகரைச் சேர்ந்த கார்த்திக், 23, மற்றும் 17 வயது சிறுவன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.வழிப்பறி செய்த பணத்தில் இருவரும் மது அருந்தியதும் தெரியவந்தது. இதில், கார்த்திக் மீது 3 குற்ற வழக்குகளும், சிறுவன் மீது ஒரு குற்றவழக்கும் உள்ளது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை