உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடனை திருப்பி தராத ஆத்திரம் வாலிபரை வெட்டிய 2 பேர் கைது 

கடனை திருப்பி தராத ஆத்திரம் வாலிபரை வெட்டிய 2 பேர் கைது 

செங்குன்றம் புழல் அடுத்த லட்சுமிபுரம், கடப்பா சாலையைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ், 25; பெயின்டர். இவர், விநாயகபுரம் அண்ணா தெருவைச் சேர்ந்த 'வெள்ளை' தினேஷ், 19, என்பவரிடம் கடன் வாங்கி உள்ளார்; ஆனால் திருப்பி தரவில்லை.இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், அவரது நண்பரான மாதவரத்தைச் சேர்ந்த சரவணன், 19, ஆகியோர், சுபாஷ் சந்திர போஸை மது அருந்த அழைத்து, தலைமை செயலக காலனி அருகில் உள்ள ரெட்டேரி ஏரிக்கரையோரம், மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சுபாஷ் சந்திரபோஸின் தலை, வலதுகை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.காயமடைந்த சுபாஷ் சந்திரபோஸ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், தினேஷ் மற்றும் சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி