உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சினிமா பாணியில் ரயிலில் போன் பறித்த இருவர் கைது

சினிமா பாணியில் ரயிலில் போன் பறித்த இருவர் கைது

கொருக்குப்பேட்டை: சினிமா பாணியில், ஓடும் ரயிலில் மொபைல் போனை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, கவுரிப்பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 40. இவர், கடந்த 30ம் தேதி மின்சார ரயிலில் பயணித்தார். அப்போது, வண்ணாரப்பேட்டை -- வியாசர்பாடி இடையே, ரேவதியிடம் மொபைல்போனை பறித்து இருவர் தப்பினர். இது குறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' கேமராவில் பதிவான கட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில், காக்கா முட்டை படப்பாணியில் ரயில்களின் படிக்கட்டுகளில் நின்றபடியும் இருந்தபடியும் மொபைல் போனில் பேசி கொண்டு பயணம் செய்யும் பயணியரை கம்பால் தாக்கி, மொபைல் போன் பறித்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தரராஜன் 24, ரஞ்சித் 32, எனவும், அதே பாணியில் ரேவதியின் மொபைல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதேபோல, பலரிடமும் திருடியது தெரியவந்தது. இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து, நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ