உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போன் பறித்த இருவர் கைது

போன் பறித்த இருவர் கைது

சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஜான்சி, 40. இவர், வேப்பேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த ஜன., 29ம் தேதி, பணி முடிந்து வேப்பேரி வடமலை தெரு வழியாக, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து வேப்பேரி போலீசார் விசாரித்தனர். இதில், ஓட்டேரியைச் சேர்ந்த முகிலன், 23, புளியந்தோப்பைச் சேர்ந்த அனுாப், 24, ஆகியோர், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை