உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோர்ட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த இருவர் கைது

கோர்ட்டில் போலி ஆவணம் சமர்ப்பித்த இருவர் கைது

சென்னை கோவையைச் சேர்ந்த வடிவேல், 38, என்பவருக்கு, சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கில், கடந்த மாதம் 22ம் தேதி, எழும்பூர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இத்தீர்ப்பை எதிர்த்து, வடிவேல் மேல்முறையீடு செய்தார். மேலும், ஜாமினில் வெளியே வருவதற்காக, அவரது ஆதரவாளர்களான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன், 60, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது ரபீ, 50, ஆகிய இருவரும், ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சமர்ப்பித்து இருந்தனர்.இந்நிலையில், இருவர் சமர்ப்பித்த ஆவணங்களும் போலி என கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவின்படி, எழும்பூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ