உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது

மதுரவாயல், மதுரவாயல், கிருஷ்ணா நகர், 28வது தெருவில், நடிகை சோனா வீடு உள்ளது. கடந்த 4ம் தேதி, இவரது வீட்டு வளாகத்தில் புகுந்த இரு மர்ம நபர்கள், 'ஏசி'யின் வெளிப்புற யூனிட்டை திருட முயன்றனர்.அப்போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனாவிடம், கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்து இருவரும் பைக்கில் தப்பிச் சென்றனர்.மதுரவாயல் போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, விசாரித்தனர். இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரவாயல், சக்ரபாணி நகரைச் சேர்ந்த லோகேஷ், 21, ஜானகி தெருவைச் சேர்ந்த சிவா, 23, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பைக் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை