மேலும் செய்திகள்
குழந்தைகளிடம் அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்
05-Oct-2025
திருவேற்காடு: வீட்டை சரியாக பூட்டாமல் தாய் சென்றதால், விளையாட வெளியே சென்ற இரு குழந்தைகளும், குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடில்: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம், பொன்னி அம்மன் நகரைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 34; பெயின்டர். அவரது மனைவி வசந்தி, 30; வீட்டு வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு ரியாஸ், 5, ரிஸ்வான், 3 என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். நேற்று காலை, மகன்கள் இருவரையும் வீட்டில்விட்டு, கதவை மூடி வசந்தி சென்றுள்ளார். தாழ்ப்பாள் சரியாக மூடாததால், குழந்தைகள் இருவரும் கதவை திறந்து, எதிரில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் சென்று விளையாடி உள்ளனர். அந்நேரம், 10 அடி ஆழமுள்ள குளத்தில் தவறி விழுந்து, இருவரும் மூழ்கினர். சிறிது நேரத்தில் குழந்தைகள் உடல்கள் நீரில் மிதந்தன. அதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக கூறினர். திருவேற்காடு போலீசார், குழந்தைளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வசந்தி வழக்கமாக வீட்டு வேலைக்கு செல்லும்போது, இரு குழந்தைகளையும் அருகில் உள்ள அங்கன்வாடியில் விட்டுவிட்டு, மாலை வந்து வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். நேற்று குழந்தைகளை வீட்டில் விட்டு சென் றதால், இருவரும் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
05-Oct-2025