உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தந்தை உயிரிழந்த நிலையில் கடலில் மூழ்கிய 2 மகள்களும் பலி

தந்தை உயிரிழந்த நிலையில் கடலில் மூழ்கிய 2 மகள்களும் பலி

மாமல்லபுரம்,கடல் அலையில் சிக்கி தந்தை உயிரிழந்த நிலையில், அவரது இரு மகள்களின் உடல்களும் நேற்று கரை ஒதுங்கின. சென்னை, அகரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 37; தச்சுத்தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி குடும்பத்தினருடன், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். மாலை 5:00 மணியளவில், சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தனர். அப்போது வெங்கடேசன், அவரது மகள்களான கார்த்திகா, 17, துளசி, 16, அவரது சகோதரி ஹேமாவதி, 37, ஆகியோர் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மீனவர்கள், ஹேமாவதியை காப்பாற்றினர். வெங்கடேசன் மற்றும் அவரது மகள்கள் அலையில் சிக்கி மாயமாகினர். வெங்கடேசன் உடல், அதே பகுதியில் அன்று மாலை கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார், மாயமான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில் துளசியின் உடலும், மாலை 4:00 மணியளவில் கார்த்திகாவின் உடலும் கரை ஒதுங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை