உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூன்று மண்டலங்களில் இரண்டு நாள் குடிநீர் கட்

மூன்று மண்டலங்களில் இரண்டு நாள் குடிநீர் கட்

சென்னை, குழாய் இணைப்பு பணிக்காக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர் ஆகிய மண்டலங்களில், இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. திரு.வி.க., நகர் மண்டபம், பட்டாளம் பகுதியில், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்லும் பிரதான குழாயை இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், நாளை மற்றும் 13ம் தேதிகளில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், நம்மாழ்வார்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அப்பகுதி மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீரை சேமித்து வைத்து கொள்ளவும். அவசர குடிநீர் தேவைக்கு, https://cmwssb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, குடிநீர் பெற்று கொள்ளலாம். இணைப்பு இல்லாத பகுதிகளில், லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை