மேலும் செய்திகள்
அதிகாரிகள் இடமாற்றம்
09-May-2025
கோயம்பேடு:கோயம்பேடு காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் பணி புரியும் போலீஸ்காரர்கள் இருவர், ஒழுங்கு நடவடிக்கையாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கோயம்பேடு கே - 10 காவல் நிலையத்தில், சேர்ம துரை மற்றும் பிரபாகரன் ஆகியோர், நுண்ணறிவு பிரிவில் பணி செய்து வந்தனர்.இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவரையும் ஆயதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் அளிக்காததன் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் சென்றதால் இடமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
09-May-2025