உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபருக்கு போதை ஊசி: மேலும் இருவர் கைது

வாலிபருக்கு போதை ஊசி: மேலும் இருவர் கைது

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் முகேஷ், 19; மூட்டை துாங்கும் தொழிலாளி. இவர், இம்மாதம் 21ம் தேதி, வலி நிவாரண மருந்தை, போதைக்காக ஊசி வழியாக உடலில் செலுத்திக் கொண்டார். வலது கையில் வீக்கம் ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, முகேஷிற்கு போதை ஊசி போட்ட, வியாசர்பாடியை சேர்ந்த கி ேஷார், 18, யானைக்கவுனியை சேர்ந்த சஞ்சய், 23, ஆகியோரை கைது செய்திருந்தனர்.வாலிபருக்கு போதை ஊசி போட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த, வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை சேர்ந்த விக்னேஷ், 20, தாமோதரன் நகரை சேர்ந்த சஞ்சய், 21, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ