மாணவி பலாத்காரம் மேலும் இருவர் கைது
சென்னை,அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி, கல்லுாரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.அவருடன் பயிலும் சக மாணவியின் நண்பர், நந்தனம் கல்லுாரி மாணவர் சுரேஷ் உட்பட மூவர், மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் பழக்கமாகினர்.சுரேஷ் உட்பட மூவரும், மாணவியின் பலவீனத்தை பயன்படுத்தி, காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர். பின், வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அதேபோல், மொபைல் போன் செயலி வாயிலாக பழக்கமான சிலரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவர் சுரேஷ், பள்ளி மாணவர் ஒருவரையும், நேற்று முன்தினம் கைது செய்தனர்.இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய, திருவள்ளூவர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 18, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 35, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.