மேலும் செய்திகள்
போதை பொருள் விற்பனை 6 பேர் கைது
14-Nov-2024
புழல், பாடி மேம்பாலத்தின் அருகே, கடந்த 20ம் தேதி, சந்தேகப்படும்படி நின்ற ஆறு பேரிடம், புழல் போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து, 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, இதில் தொடர்புள்ள பெண் எஸ்.ஐ.,யின் கணவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் அளித்த தகவலின்படி, கடந்த 25ம் தேதி பாடி அருகே சுற்றிய மேலும் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 64 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 6 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுபாஷ் என்பவர் கொடுத்த தகவலின்படி, பெங்களூரு அடுத்த ஓசூர் சின்னார் பகுதியில் தங்கியிருந்த சோயிப் முகமது, 27, மற்றும் அவரது தம்பி முகமது சகிப், 22, ஆகிய இருவரை, தனிப்படை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.இவர்களிடம் இருந்து 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
14-Nov-2024