ரூ.1.40 கோடி நிலமோசடி மேலும் இருவர் கைது
ஆவடிபோரூர், கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 42. இவர், கடந்த 2023 செப்டம்பரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், கொளப்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலம், ேஹமாசேஷன் என்பவரிடம் 1.40 கோடி ரூபாய்க்கு வாங்கினேன்.அவரது மகள் சந்திரா பெயரில், நிலத்தின் தாய் பத்திரம் வைத்து கிரையம் செய்து கொடுத்தார். அதற்காக 1.10 கோடி ரூபாய் கொடுத்தேன். நிலத்தில் பிரச்னை ஏற்படவே, ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.விசாரணையில், சந்திரா என்பவர் போலி நபர் என்பதும், ஹேமா சேஷனுக்கு மகன் மட்டுமே உள்ளதும் தெரியவந்தது. இவர், வழக்கறிஞர் பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, ஜெயகுமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்து, ராமசாமியை ஏமாற்றியது தெரிய வந்தது. இந்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆள் மாறாட்டத்திற்கு உடந்தையாக இருந்த, வியாசர்பாடியை, சேர்ந்த மணவாளன், 49, விஸ்வநாதன், 49, ஆகியோர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.