உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டலில் திருடிய மேலும் இருவர் கைது

ஹோட்டலில் திருடிய மேலும் இருவர் கைது

சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் ஜாபர் மொய்தீன், 46. இவர், டாக்டர் நடேசன் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.ஏப்., 27ம் தேதி இரவு, கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த 2,500 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, அடுத்த நாளே சையது நதீம் என்பவரை கைது செய்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று வழக்கில் தொடர்புடைய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தஸ்தகீர், 21, சந்தோஷ், 21, ஆகிய இருவரை கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர். இதில் தஸ்தகீர் மீது, ஏற்கனவே மூன்று வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி