மேலும் செய்திகள்
11 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்
14-Nov-2024
அரும்பாக்கம், சென்னை அரும்பாக்கத்தில், கடந்த மாதம் மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் விற்ற வழக்கில், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பெங்களூருவில் பதுங்கியுள்ள, நைஜீரிய வாலிபர் தலைமையில், போதை பொருள் கடத்தல் கும்பல் செயல்படுவது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த விஸ்வநாதன், வண்ணராப்பேட்டை மஸ்தான் உட்பட, 11 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அஜா நிபோன்யே பிலிப், 31 என்பவரை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். வழக்கில், பெங்களூரு விஸ்வநாதனை கைது செய்தபோது, அவரது கூட்டாளிகள் ஆனந்த்குமார், 40, ஆந்திராவை சேர்ந்த வெங்கட ரமணா, 43 ஆகியோர் காரில் தப்பினர். பெங்களூரில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14-Nov-2024