மேலும் செய்திகள்
அலைபேசி கடையில் தீ
25-Jun-2025
வியாசர்பாடி, மாமூல் கேட்டு, பிரியாணி கடை ஊழியர் உட்பட இருவருக்கு வெட்டு விழுந்தது.அயனாவரம், மயிலாப்பன் தெருவைச் சேர்ந்தவர் அஜிஸ் ரஹ்மான், 61. இவர், வியாசர்பாடி சந்தை பகுதியில் உள்ள பிரியாணி கடையில், ஒன்றரை ஆண்டுகளாக பணி புரிகிறார்.நேற்று இவரது பிரியாணி கடைக்கு மதுபோதையில் வந்த பிரகாஷ் என்பவர், பிரியாணி சாப்பிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, குவார்ட்டர் பாட்டில் மறந்து வைத்து விட்டதாக கூறி மீண்டும் கடைக்கு வந்துள்ளார். குவார்ட்டர் பாட்டிலை காணவில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளர் முஹமது சுைஹல், பிரகாஷிடம் 200 ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் கவுதம், கடை ஊழியர் அஜிஸ் ரஹ்மானிடம், மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.அவர் தர மறுக்கவே, பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலையில் வெட்டினார். தடுக்க வந்த எதிர் கடைக்காரர் அப்துல் பாஷா, 48, என்பவருக்கு, கையில் வெட்டு விழுந்தது.அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து வியாசர்பாடி, புது நகரைச் சேர்ந்த கவுதம், 33, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாைஷ, போலீசார் தேடி வருகின்றனர்.
25-Jun-2025